மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான இருபதுக்கு 20 சர்வதேச தொடரை வென்றது இலங்கை!
Friday, October 18th, 2024
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான 3 ஆவதும், இறுதியுமான ஆட்டத்தில் 9 விக்கெட்களினால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி 9 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இருபதுக்கு 20 சர்வதேச தொடரைக் கைப்பற்றியது.
3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியீட்டிய நிலையில் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி இலகு வெற்றியீட்டியது.
அதன் படி தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்று தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் ரொவ்மன் பொவெல் 37 ஓட்டங்களையும், குடகேஷ் மோட்டி 32 ஓட்டங்களையும் பிரண்டன் கிங் 23 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.
இலங்கையின் பந்துவீச்சில் மஹேஷ் தீக்ஷன 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், ஹசரங்க 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அதன் படி 163 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
10.1 ஓவர்களில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்புக்கு 100 ஓட்டங்களைக் கடந்தது. பின்னர் 18 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 67 ஓட்டங்களையும், குசல் பெரேரா 52 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றனர்.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் 2015ஆம் ஆண்டு முதல் சர்வதேச இருபதுக்கு 20 தொடர் நடைபெற்றுள்ளதுடன் முதல் தடவையாக இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106