கடந்த முப்பது வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த காணிப்பிரச்சினையை மூன்றே வாரங்களில் தீர்வைப் பெற்றுத்தந்தவர் டக்ளஸ் தேவானந்தா – தேவன்பிட்டி அன்ரனிஸ்!

Wednesday, October 16th, 2024

கடந்த முப்பது வருடங்களாகத் தீர்க்கப்படாமல் வாழ்வே சூனியமாகியிருந்த தேவன்பிட்டி மக்களின் காணிப் பிரச்சினையை மூன்றே மூன்று வாரங்களில் தீர்வினை பெற்றுத்தந்து மக்களின் மனங்களில் நீங்காத இடம்பிடித்துள்ளார் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்.

முப்பது வருடங்களாக நாடாளுமன்றம் செல்லும் டக்ளஸ் தேவானந்தாவை வரலாற்றில் தோற்கடிக்க முடியாத சாதனை தலைவராக மீண்டும் நாடாளுமன்றம் அனுப்பி வைப்போம் எனவும் தேவன்பிட்டி மக்களின் ஒரே தெரிவு அவரே என சூளுரைத்தார் அன்ரனிஸ்.

தேவன்பிட்டியில் இன்று  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய தேவன்பிட்டி பொது மக்கள் பிரதிநிதி அன்ரனிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனிடையே மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சின்னச் சன்னார் கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த கிராமத்திற்கு நேரடி  விஜயம் செய்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கிராம மக்களோடு கலந்துரையாடி அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் மாழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் அவர்களது வாழ்வாதார உதவிக்களுக்கு அவசர உதவிகள் வழங்க ஏற்பாடு செய்து கொடுப்பதாக தெரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts: