யாழ். கிளி தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்த கட்சிகள் மற்றும் குழுக்கள் தொடர்பான விபரம்!
Friday, October 11th, 2024
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை வரை 10 அரசியல் கட்சிகளும், 9 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பில் போட்டியிடுவதற்காகவே 19 வேட்புமனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேநேரம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக 34 சுயேட்சை குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர்.
வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று வெள்ளிக்கிழமை இறுதித் தினம் என்பதனால் இன்று ஒரே நாளில் அதிகளவு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
000
Related posts:
O/L மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகம் விரைவில்!
விரைவில் மாகாண சபை தேர்தல் - மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே தெரிவிப்பு!
Online இல் சேவை வழங்க ஸ்டூடியோக்களுக்கு அனுமதி - அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவிப்பு!
|
|
|


