நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் முன்னாள் MPக்கள் இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்த முடியாது – நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு!
Wednesday, October 2nd, 2024
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அனைத்து முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர குடிவரவு குடியகல்வு திணைக்கள தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் சாதாரண கடவுச்சீட்டைப் பெற வேண்டுமெனவும் அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன், கடவுச்சீட்டுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரும் தலைமை அதிகாரியுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
இதன்படி, அரசியலமைப்பு பேரவையிலுள்ள சபாநாயகர், பிரதி சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதன் மூன்று உறுப்பினர்களைத் தவிர 219 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்துச் செய்யப்படுள்ளன.
இதனால், முன்னாள் அமைச்சர்களின் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
வழக்கமான முறைப்படி, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அவர்களது மனைவிகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இந்த இராஜதந்திர கடவுச்சீட்டு சலுகைகள் உண்டு.
அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது மனைவி அல்லது கணவர்களும் குறித்த சிறப்புரிமைக்கு உரிமையுடையவர்களாவர்.
இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் அமைச்சுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ விமான அனுமதிப்பத்திரங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சமிந்த குலரத்ன மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் மாதிவெல வீடமைப்புத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளில், பொதுத் தேர்தல் முடியும் வரை முன்னாள் எம்.பி.க்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தவிர்ந்த, ஏனைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்பட்டுள்ள ரிவோல்வர்களை மீள ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட துப்பாக்கிகளை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனுமதியின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவற்றை வைத்திருக்க முடியும் என்று அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106