நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பம்!
Tuesday, October 1st, 2024
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பமாகவுள்ளது.
இந்த பணிகள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்த அனைவரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மீண்டும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, தகுதியான அனைத்து விண்ணப்பதாரிகளும், விண்ணப்பங்களை எதிர்வரும் 8ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தமது மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் கையளிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
000
Related posts:
குருநகர் வேளாங்கன்னி ஆல திருவிழா ஆரம்பம்
பயனர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியது பேஸ்புக்!
கொரோனா இறப்புகள் இரண்டு அடிப்படையில் பதிவாகின்றன - 22 ஆவது கொரோனா மரணம் தொடர்பில் தொற்றுநோயியல் நிபு...
|
|
|


