நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!
Monday, September 30th, 2024
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
காலியில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 602 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் 182 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 106 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பந்துவீச்சில் இலங்கை அணியின் சார்பில் பிரபாத் ஜெயசூர்ய 6 விக்கெட்டுகளையும் அறிமுக வீரரான நிசான் பீரிஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தநிலையில் 514 ஓட்டங்களால் பின்னிலையிலிருந்த நியூசிலாந்து அணி Follow-on முறையில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியது.
இதற்கமைய நியூசிலாந்து அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 360 ஓட்டங்களைப் பெற்றநிலையில் தோல்வியைத் தழுவியது.
இதன்படி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 எனும் அடிப்படையில் இலங்கை அணி கைப்பற்றியது.
மேலும் போட்டியின் நாயகனாக கமிந்து மெண்டிஸ் தெரிவானதுடன், தொடரின் நாயகனாக பிரபாத் ஜெயசூர்ய தெரிவுசெய்யப்பட்டார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106