ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் 14 ஆம் திகதிவரை சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Sunday, September 29th, 2024
தற்போது வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை சமர்ப்பிக்க முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பரீட்சை பெறுபேறுகளைப் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களுக்குப் பிரவேசித்து பரீட்சார்த்திகளின் சுட்டெண்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
அதேநேரம், onlineexams.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக, சகல அதிபர்களுக்கும், தமக்கான பயநர் பெயரைப் பயன்படுத்தி பாடசாலைகளின் பெறுபேறு அட்டவணையைத் தரவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
00
Related posts:
சூரியகாந்தி செய்கையினை விரிவாக்குங்கள் - இலங்கையின் விவசாயத் துறையின் மேம்பாட்டிற்கு இந்தியா பூரண ஒத...
புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில் அடையாள இலக்கம் - இன்று முதல்ஆரம்பம் என ஆட்பத...
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு - ஈ.பி.டி.பி முன்னாயத்த கலந்துரையாடல்!
|
|
|


