வெதுப்பக உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!
Thursday, September 26th, 2024
”சந்தையில் முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் முட்டை தொடர்பான பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைக்க வேண்டும்” என நுகர்வோர் விவகார அதிகார சபை கூறியுள்ளது.
கடந்த காலங்களில் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை தற்போது 28 முதல் 35 ரூபா வரை உள்ளதாக அதன் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்தார்.
அதன்படி, அந்த அனுகூலத்தை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வவுனியா தெற்கு பிரதேச சபை சிற்றூழியர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!
வாகன வகைக்குள் அடங்காத அத்தியாவசிய உபகரணங்களுக்கும் கியூ. ஆர் மூலம் எரிபொருளை விநியோகம்!
52 அரச நிறுவனங்களினால் 8600 கோடி ரூபாய் நட்டம் - நிதி அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டு!
|
|
|


