ஜனாதிபதி தேர்தல் – மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு – சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் பிரதீபன் தெரிவிப்பு!
Saturday, September 21st, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேநேரம் தேர்தல் தினத்தில் வன்முறைகள் மற்றும் சட்டமீறல்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பானது 511 வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று (21.09.2024) காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதாக, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அறியத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106