வாக்களித்தவுடன் உடனடியாக வீடுகளுக்கு செல்லுங்கள் – மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!
Wednesday, September 18th, 2024
எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின்னர் உடனடியாக வீடுகளுக்குச் செல்லுமாறும், நாட்டு மக்களிடம் தேர்தல் ஆணைக்குழு கேட்டுள்ளது.
காரணமின்றி வாக்குச் சாவடிகளில் அல்லது அருகில் இருக்க வேண்டாம் என்றும் வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்தில் தேர்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொன்னால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்
அதேவேளை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அனைத்து தேர்தல் பிரசாரங்களும் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106