நெருங்கும் ஜனாதிபதி தேர்தல் – 10 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ தேர்தல் வாக்காளர் அட்டைகளை விநியோகம்!

Thursday, September 12th, 2024

10 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ தேர்தல் வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களம் விநியோகித்துள்ளது.

இதன்படி, மீதமுள்ள வாக்காளர் அட்டைகள் அடுத்த சில நாட்களில் விநியோகிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ரஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்தை எதிர்வரும் 14 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்ய தபால் திணைக்களம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த திகதிக்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லை என்றால், தேசிய அடையாள அட்டையுடன் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திற்கு சென்று அடையாளத்தை சரிபார்த்து, அவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.

தேர்தல் நாள் வரை வாக்காளர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106