காஸ் சிலிண்டருக் மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கு நானே பொறுப்பு – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, September 10th, 2024


~~~~~~

காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு மக்கள் வழங்குகின்ற வாக்குகளுக்கான தார்மீகப்  பொறுப்பினை ஏற்று மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றி வைப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி நகரில் இ்ன்று இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருத்து உரையாற்றும் போதே ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம்   மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

“ஈ.பி.டி.பி. கட்சியின் அழைப்பினை ஏற்று, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமான என் மீது நம்பிக்கை வைத்து ஆயிரக்கணக்கில் திரண்டு வந்திருக்கிற கிளிநொச்சி மக்களுக்கிய உங்களுக்கு நன்றியை தெரிவத்துக் கொள்கின்றேன்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எங்களின் கோரிககையை ஏற்று ரணில் விக்கிரமசிங்கவின் காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களித்து அவரை வெற்றியடைய செய்ய வேண்டும்.

அவர் வெற்றியடைந்ததும், அவருக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களும் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை வழங்குகின்றேன்.” என்று தெரிவித்தார்.

Related posts:


உள்ளூர் உற்பத்தி நிலைகளை வலுப்படுத்துவதன் ஊடக சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் - அமைச்சர் டக்...
ரணிலின் வெற்றி காலத்தின் தேவை - சந்தர்ப்பத்தை தவறவிட்டால் நிவர்த்தி செய்ய அடுத்த ஐந்து வருடங்கள் கா...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஈபிடிபியின் வேட...