தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

Wednesday, August 28th, 2024

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் இன்றையதினம் (28) காலை இடம்பெற்றது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இணைத்தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான பி.எஸ்.எம்.சாள்ஸின் பிரசன்னத்துடன் யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன்  பங்குபற்றலுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், முப்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

000

Related posts:

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை நோக்கியதாகவே எமது பயணங்கள் தொடரும் - வவுனிய...
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் வீடமைப்புக் கடன் தொகையை  பொருளாதார சூழலுக்கேற்ப அதிகரி...
நல்லவரா வல்லவரா தேவை என்ற நிலையில், ஜனாதிபதி மீது நாம் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. - அமைச்சர் டக...

அசௌகரியங்களை எதிர்கொ ள்ளும் மக்களுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுத்தரவேண்டும் - ஆளுநரிடம் டக்ளஸ் தேவ...
ஈழப் போராட்டத்தின் ஆரம்ப நாள்களில், உறுதுணையாய் நின்று வலுவூட்டி வளர்த்த அக்கா தோழரை அமைச்சர் டக்ளஸ்...
கிளி - மத்திய பேருந்து நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கடைத்தொகுதிகளை நேரில் சென்று பார்வைய...