“தோழர் 30” – சாதனை நாயகனுக்கு வடக்கு கிழக்கெங்கும் குவியும் பாராட்டுக்கள்!
Sunday, August 25th, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் வடக்கு கிழக்கு மாகாணம் எங்கும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
அவர் 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதல் தடவையாக இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி தமிழ் மக்களின் பிரதிநிதியாக சென்றிருந்தார்.
அன்றிலிருந்து இன்றுவரை அதாவது 2024 ஆம் ஆண்டுவரையான 30 ஆண்டுகளாக நடந்த அத்தனை தேர்தல்களிலும் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று தொடர்ந்து நாடாளுமன்றம் சென்று ஈழத் தமிழ் மக்களின் ஜனநாயகக் குரலாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றார்.
அந்த தொடர்ச்சியான நாடாளுமன்ற பங்களிப்பை கெளரவிக்கும் முகமாகவும், அவரை பாராட்டும் விதமாகவும் வடக்கு கிழக்கிலுள்ள கட்சியின் நிர்வாகிகள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், பொது அமைப்புக்கள் என பலரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கெளரவித்தும் , நினைவுச் சின்னங்களை வழங்கியும் வருகின்றனர்.
இந்நிகழ்வின் தொடர்ச்சியாக இன்றையதினமும் யாழ்ப்பாணத்திலுள்ள ஈபிடிபியின் அலுவலகத்தில் திரண்ட தோழர்கள் மற்றும் பொது அமைப்புகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மலர்மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் , நினைவுச் சின்னங்கள் வழங்கியும் தமது பாராட்டுக்களை தெரிவித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106








