தோழர் 30″ மாபெரும் கிரிக்கெற் தொடர் – வவுனியாவில் ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, August 11th, 2024


தோழர் 30″ வரலாற்று நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் வவுனியாவில் மாபெரும் துடுப்பாட்ட  கிறிக்கெட் சுற்றுத் தொடர் ஈழ மக்கள் ஜனநாயக க் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

முப்பது வருடங்களாக மக்கள் மனங்களை வென்று  தோற்கடிக்கப்படாது தமிழ் மக்களால் தொடர்ச்சியாக நாடாளுமன்றுக்கு தமது குரலாகவும் பிரதிநிதியாகவும் அனுப்பப்பட்டு வரும் வரலாற்று நாயகன் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தாவை கௌரவிக்கும் வகையில் “தோழர் 30 எனும்” வரலாற்று நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக குறித்த சுற்றுப்போட்டி நடைபெறுகின்றது.

வவுனியா காத்தார் சின்னக்குளம் வாணி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் குறித்த சுற்றுப்போட்டியில்  பதினாறு விளையாட்டு கழகங்கள் பங்குபற்றுகின்றன.

இதனடிப்படையில்  மாபெரும் துடுப்பாட்ட  கிறிக்கெட்  தொடரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

குறித்த கிரிக்கெற் தொடரை ஈழ் மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம்  தீலிபன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றுகின்றது.

குறித்த நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளர்  பசிபதி சீவரத்தினம் தொடரில் கலந்துகொள்ளும் கழகங்களின் வீரர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார்.
000

Related posts:

சகல பட்டதாரிகளையும் பட்டதாரி ஆளணிக்குள் உள்வாங்கி பொருத்தமான பதவிப் பெயர்களில் நியமனங்கள் வழங்கப்பட ...
நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய கப்பிட்டல் தொலைக்காட்சிக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் செயற்பாடுகள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக...