வடக்கில் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க இந்தியா ஆர்வம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, April 1st, 2021

வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படுகின்ற போது அவற்றிற்கு பங்களிப்பதற்கு இந்தியா ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மன்னார் ஓலைத்தொடுவாயில்  கடலட்டை இனப்பெருக்க நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடிய இலங்கைக்கான இந்தியத் தூதுவர் இலங்கை கடற்றொழிலாளர்களின் முன்னேற்றம் இந்தியாவின் கரிசனையை வெளிப்படுத்தியதாகவும், குறிப்பாக வடக்கின் பருத்தித்துறை, குருநகர், பேசாலை போன்ற பிரதேசங்களில் மீன்பிடித் துறைமுகங்களின் உருவாக்கத்தில் இந்தியா பங்களிக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் பருத்தித்துறை மற்றும் பேசாலை ஆகிய இடங்களில் அமைக்கப்படவிருந்த துறைமுகங்கள் சிலரின் எதிர்ப்பினால் கைவிடப்பட்ட நிலையில், குறித்த துறைமுகங்களை உருவாக்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடும்பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நலன்புரி நிலையங்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளில் அவலப்படுபவர்கள் சொந்த நிலத்தில் மீள்குடியேற்றப...
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மீண்டுமொரு வாய்ப்பு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ...
ஆரம்ப பாடசாலைகளுக்கும் உடற்பயிற்சி ஆசிரியர்களது பதவிநிலை அவசியம் - நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு கல்...