புலம்பெயர்ந்தோருக்கு எதிராக இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் கலவரம் – இலங்கை கிரிக்கெட் அணி கவலை!

Friday, August 9th, 2024

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் வெடித்துள்ள புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கலவரம் காரணமாகப் பாதுகாப்பு நிலைமை குறித்து அங்கு செல்லவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி கவலை வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி இங்கிலாந்து கிரிக்கெட் சபையானது, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிரிக்கெட் தொடருக்கு முந்தைய பயிற்சிக்காக ஏற்கனவே இங்கிலாந்து சென்றுள்ள வீரர்கள் அமைதியின்மை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போது இங்கிலாந்தில் உள்ள 7 வீரர்கள் மற்றும் 2 துணை ஊழியர்கள் கொண்ட குழு தமக்குச் சிறந்த பாதுகாப்பை ஏற்பாடு செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இருப்பினும் இது தொடர்பில் தமக்கு இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை வீரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் விரைவாகப் பதிலளித்து, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளதாக இலங்கை அணியின் முகாமையாளரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106