ஸ்திரத்தன்மைக்கு பங்களாதேஷ் விரைவில் திரும்பும் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை!
Tuesday, August 6th, 2024
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களாதேஷ் விரைவாகத் திரும்பும் என தாம் நம்புவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அவர் தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷுடனான நீடித்த நட்புறவைத் தொடர்ந்தும் மதிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இந்த சவாலான தருணங்களில் பங்களாதேஷ் மக்களுடன் இலங்கை இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த குடும்பங்களுக்காகப் பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அங்கு அமைதி மற்றும் செழிப்பு நிறைந்த எதிர்காலத்தைத் தாம் எதிர்பார்ப்பதாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மூன்று நாடுகளின் கல்வித்துறை அமைச்சர்கள் இந்தியாவில் சந்திப்பு!
பொருளாதார ஆர்வலர்கள் உள்ளடங்கிய 17 பேர் கொண்ட குழுவொன்றை நிறுவியது மத்திய வங்கி!
ஏழைப் பிள்ளைகளுக்கு பணமில்லாமல் இலவச சீசன் டிக்கெட்டுகளை - அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றில் அ...
|
|
|


