சமநிலையில் நிறைவடைந்த முதலாவது ஒருநாள் போட்டி!

Saturday, August 3rd, 2024

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் துனித் வெல்லாலகே 66 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்த நிலையில் 231 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது. இதற்கமைய குறித்த போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

000

Related posts: