மின்னல் தாக்கி மூவர் பலி – யாழில் சோகம்!
Wednesday, April 17th, 2019
யாழ்ப்பாணம், குப்பிளான் தெற்கு பகுதியில் நேற்று(16) மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள புகையிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஆண் ஒருவரும் இரு பெண்களும், இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
மதம் சார்ந்த பாடங்களுக்காக 2,643 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை!
கடன்களை அரசாங்கம் தொடர்ந்தும் செலுத்தி வருகின்றது - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் - ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாக தகவல்!
|
|
|


