ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் – பஸில் ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு!

Tuesday, July 30th, 2024

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் அவர் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளமை முற்றிலும் தவறானது என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டமாக தீர்மானம் எடுத்துள்ளது.

மொட்டுச் சின்னத்தில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை களமிறக்க ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ, –

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளமை முற்றிலும் தவறானது.

2022 ஆம் ஆண்டு எவ்வித நிபந்தனைகளுமின்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினோம். ஆனால் கடந்த 2 ஆண்டுகாலமாக அவர் பொதுஜன பெரமுனவின் கட்சிக்கு முன்னுரிமை வழங்கவில்லை.

மாறாக வீழ்ச்சியடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியை எமது ஆதரவை கொண்டு பலப்படுத்தி பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தவே முயற்சிக்கிறார். இதற்கு இடமளிக்க முடியாது.

காபந்து அரசாங்கத்தில் பொதுஜன பெரமுனவுக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அவர் சாதகமான பதிலை வழங்கவில்லை.

அத்துடன் பொருளாதார மீட்சிக்காக அவர் எடுக்கும் தீர்மானங்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க முடியாது. அவரது கொள்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கினால் கட்சி முழுமையாக இல்லாதொழியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106