இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 32,078 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!
Sunday, July 28th, 2024
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 32,078 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தில் 7,551 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 12 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106