கடலட்டை பண்ணை அமைப்பதற்கான அனுமதியை விரைவுபடுத்தி தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் தீவக கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Sunday, July 28th, 2024

வாய்ப்புக்களைச் சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே கடலட்டை உற்பத்தி அதிகளவில் முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த தொழிலை செய்ய விண்ணப்பித்தவர்களுக்கான அனுமதிகளை வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறும் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடல் அட்டை பண்ணைகளை அமைக்க விண்ணப்பித்துள்ள நிலையில் அதற்கான அனுமதிகள் தாமதிக்கப்படுதல் மற்றும் பண்ணை நடவடிக்கைகளின்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை பெற்றுத்தருமாறு யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது பண்ணையை அமைப்பதற்கான அனுமதிகளை தந்து எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த துறைசார் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை. வேலணை. குருநகர், புங்குடுதிவு, மண்டைதீவு ஆகிய பகுதிகளின்  கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அவரது யாழ்ப்பாணம் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

அத்துடன் கடலட்டை பண்ணைகளை அமைக்க அனுமதி கொடுக்க கூடாது என சில விஷமிகள் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் அது அவர்டகளது சயநலன்களாகவெ இரக்கின்றன. அனால் குறித்த பண்ணைகளை அமைப்பதால் ஏனைய தொழில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதென நாம் நினைக்கின்றோம். ஏனெனில் அது தொ்டர்பில் துறைசார் அதிகாரிகள் வஞ்ஞான ரீதியில் ஆய்வுகளை முன்னெடுத்து அதற்கான அமைவிடங்கள் ஒதுக்கப்படுவதால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது.

குறிப்பாக இந்த பண்ணைகளால் மீன் வளத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. யாருடைய தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது. எங்களுக்கும் கடல் வளத்திலும் சுற்று சூழலிலும் எங்களுக்கும் அக்கறை உண்டு  எனவே கறித்த பண்ணைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறும் அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இதன்போது கருத்து தெரிவித்து அமைச்சர் – பொய்களுக்கு மக்கள் இடங்கொடுக்காது வெளிப்படையான உண்மைகளை இனங்கண்டு எதிர்காலத்தை பொருளாதார ரீதியில் வெற்றிகொள்ள வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு அவசியமானதுமாகும்.

எமது மக்களே எமது பிரதேசங்களின் வளங்களைப் பயன்படுத்தி உச்ச பயன்களைப் பெறவேண்டும். அதுவே எனது எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் சுதாகரன், நெக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் நிருபராஜ் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106