மகளிருக்கான ஆசியக் கிண்ணம் – இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இலங்கை அணி!
Saturday, July 27th, 2024
மகளிருக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
தம்புள்ளையில் நடைபெற்ற குறித்த போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் 141 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. துடுப்பாட்டத்தில் சமரி அத்தபத்து 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதற்கமைய 2024 ஆம் ஆண்டுக்கான மகளிருக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106