மூத்த போராளி, தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் புகழுடல் தீயுடன் சங்கமம்!
Thursday, July 25th, 2024
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான மூத்த போராளி, எமது சமகால தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் “பனாகொடை மகேஸ்வரன் ” அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியது.
கடந்த 19.07.2024 அன்று காலமான ஈழப் போராட்டத்தின் மூத்த போராளியான அமரர் மகேஸ்வரனின் இறுதிக் கிரிகைகள் இன்று நடைபெற்றன.
இந்நிலையில் இன்றையதினம் அன்னாரின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சமகால தோழர்கள் என பலர் தமது இறுதி அஞ்சலிகளை செலுத்தியிருந்ததுடன் அஞ:சலி உரைகளையும் நிகழ்த்தியிருந்தனர்.
இந்நிலையில் இறுதிக் காலத்தில் தங்களின் சகோதரரான தம்பாபிள்ளை மகேஸ்வரன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தது மட்டுமல்லாமல் பல்வேறு உதவிகளையும் செய்த (அமைச்சர்) டக்ளஸ் தேவானந்தா அண்ணாவிற்கு குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அமரர் பனாகொட மகேஸ்வரனின் இளைய சகோதரி தெரிவித்தார்.
மூத்த போராளியான அமரர் மகேஸ்வரனின் இறுதிக் கிரிகைகள் இன்று நடந்த நிலையில், அங்கு நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தமிழ் ஈழ இராணுவம் “தம்பா” எனும் இயக்கம் கட்டியமைத்து அதற்கு தலைமையேற்று ஈழ விடுதலைப் போரில் தனது அர்ப்பணிப்புடனான பங்களிப்பை வழங்கிய தோழர் மகேஸ்வரன் அவர்கள் ஈழப் போராட்ட வரலாற்றில் மறுக்கமுடியாத பதிவை பதித்துச் சென்றுள்ளார்.
தோழர் மகேஸ்வரன் அக்காலத்திலும், பிற்காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் தோழமையுடன் இணைந்து பயணித்தார்.
உலக வரலாற்றையும், மனித வரலாற்றையும் தனக்கேயுரிய நகைச்சுவை கலந்து பகிர்ந்து கொள்ளும் நடமாடும் விக்கிப்பீடியா மனிதராக வாழ்ந்த தோழர் மகேஸ்வரன் அவர்களை ஈழ வரலாறு என்றும் நினைவில் பதிந்திருக்கும்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106






