உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் – 84 ஆவது இடத்தில் இலங்கை!

Thursday, July 25th, 2024

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.

அதனடிப்படையில் சிங்கப்பூர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதில் இலங்கை கடவுச்சீட்டு 84 ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த 199 நாடுகளின் கடவுச்சீட்டுகளின் தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.

மேலும், பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106