இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கடிதம்!

Thursday, July 25th, 2024

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரிமுதல் கடந்த 22 ஆம் திகதி வரை மாத்திரம் 250 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

எனவே, இந்த நிலைமையைத் தணித்திட தூதரகமட்ட முயற்சிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து இலங்கையிலிருந்து 87 மீனவர்களையும், 175 படகுகளையும் விரைவாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106