பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் 17 பேருடன் கடலில் மூழ்கிய எண்ணைக்கப்பல்!

Thursday, July 25th, 2024

1.5 மில்லியன் லிட்டர் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால், சுற்றியுள்ள கடற்பகுதியில் பாரிய எண்ணெய் படலங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த 17 பணியாளர்களில் 16 பேரை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், குறித்த நபரை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எண்ணெய் கசிவு கண்டறியப்பட்டு அதனை இல்லாது செய்ய முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும்,  ஆனால் பலத்த காற்று மற்றும் அதிக அலைகள் அவற்றிற்கு இடையூராக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கெய்மி சூறாவளி பருவகால பருவமழையை தீவிரமடைந்துள்ளதால் இந்த நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106