2025 ஆம் ஆண்டுக்கான பாடநூல்கள் விநியோகம் – சீருடைத் துணிகளை முழுமையாக இலவசமாக வழங்குவதற்கும் சீன அரசாங்கம் இணக்கம்!

Wednesday, July 24th, 2024

2025 ஆம் கல்வி ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு தேவையான இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் நிகழ்வு நேற்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

பாடப் புத்தகங்கள் பிராந்திய மத்திய நிலையங்களுக்கான விநியோகம் நேற்று கல்வி அமைச்சின் ஹோமாகம, பிடிப்பன பிரதான களஞ்சிய வளாகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான சீருடைத் துணிகளை முழுமையாக இலவசமாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அரசாங்கத்துக்கு ஆறு பில்லியன் ரூபாவை சேமிக்க முடிந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தேவையான துணிகள் குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர் தேவையான அளவு துணியை நாட்டுக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது என்றார்.

மேலும்இ அடுத்த ஆண்டு முதல் ஆரம்ப வகுப்புகளுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தி வேறு சில வகுப்புகளுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளரைம குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106