அஸ்வெசும நலன்புரி திட்டம் – இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள், நிறைவு செய்ய நடவடிக்கை – நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் அறிவிப்பு!
Tuesday, July 23rd, 2024
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள், நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், முதற்கட்டமாக இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய குடும்பங்களுக்கு, கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டதுடன், சுமார் 4 இலட்சத்து 54 ஆயிரத்து 924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அந்த விண்ணப்பங்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலிருந்து மாவட்ட மட்டத்தில் அதிகளவான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் கணக்கெடுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த அலுவலர்கள் அந்தந்த வீடுகளுக்குச் சென்று குடும்ப உறுப்பினர்களின் தகவல்களைக் கண்காணித்து, தொலைபேசி செயலிமூலம் சமூகப் பாதுகாப்புத் தகவல் பதிவேட்டில் பதிவுசெய்வர் என அவர் குறிப்பிட்டார்.
கணக்கெடுப்பு அலுவலரால் தகவல் கட்டமைக்கப்பட்ட பின்னர், அனைத்து பிரதேச செயலாளர்களும் கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியில் விண்ணப்பதாரர்களின் முழுமையான விபரங்களைக் கண்காணிக்க முடியும்.
கணக்கெடுப்பின் முடிவில், அந்தந்த குடும்பங்களின் தகவல்கள் தேர்வுக் குழுக்களால் கண்காணிக்கப்படுகின்றன. தேர்வுக் குழுக்கள் கணக்கெடுத்த, குடும்பத்தின் தகவலைக் கண்காணித்து, தெரிவு அளவுகோல்களின் கணக்கீட்டை அங்கீகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவு அளவுகோல்கள் கணக்கிடப்பட்ட பின்னர், வறுமையைக் கணக்கிடுவதற்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படுகின்றது.
இது கல்வி, சுகாதாரம், பொருளாதார நிலை, சொத்துகள், வீட்டு நிலைமை மற்றும் குடும்ப புள்ளிவிவரங்கள் ஆகிய 6 பரிமாணங்களின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.
இதன்பின்னர் தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் தயாரிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106