வவுனியா மதீனா நகர் அல்அக்சா முன்பள்ளி மற்றும் மதீனா விளையாட்டு மைதான புனரமைப்புக்கு ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட MP திலீபன் நிதி ஒதுக்கீடு – ஆபிவிருத்தி நடவடிக்கைகளையும் ஆரம்பித்துவைப்பு!

Saturday, July 20th, 2024

வவுனியா மதீனா நகர் அல்அக்சா முன்பள்ளி புனரமைப்பு மற்றும் மதீனா விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான புனரமைப்பு ஆகியவற்றை மேற்கொள்வதற்காக ஈழ மக்கள்  ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான குலசிங்கம் திலீபனால் 1.1 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது

இதையடுத்து குறித்த இரு திட்டங்களினதும் அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பிரதாயபபூர்வமாக  குலசிஜங்கம் திலீபனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் வவுனியா மதீனா நகர் அல்அக்சா முன்பள்ளி புனரமைப்பிற்கு 400 ஆயிரம் ரூபாவும்  மதீனா விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான பனரமைப்பிற்கு 700 ஆயிரம் ரூபாயும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்  வன்னிஜ மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிபனால் ஒதுக்கீட செ்ய்ய்பட்ட நிலையில்  அதற்கான வேலைத் திட்டத்தினை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

குறித்த நிகழ்வில் கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச இளைஞரணி உதவி நிர்வாகச் செயலாளர் அன்சார், வவுனியா தெற்கு பிரதேச நிர்வாகச் செயலாளர் இரவீந்திரன், குகன், சந்திரன் மற்றும் ஊடகச் பிரிவு சீலன் ஆகியோரும் பங்கெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106