இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு சொந்தமான கட்டடம் ஒன்றில் தாக்குதல் – இலங்கையர்கள் பாதுகாப்பாகச் செயற்படுமாறு அறிவுறுத்து!

Saturday, July 20th, 2024

இஸ்ரேல் – டெல்அவிவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு சொந்தமான கட்டடம் ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த கட்டடத்தின் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம், அங்குள்ள இலங்கையர்களைப் பாதுகாப்பாக செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளது. குறித்த பகுதியில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் தங்கியிருந்த கட்டடம் ஒன்றில் நேற்று இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்தேகத்துக்குரிய சம்பவமொன்றை அடுத்துக் குறித்த கட்டடம் முத்திரையிடப்பட்டுள்ளது.

தற்போது இராணுவத்தினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அங்குத் தங்கியிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்குள்ள இலங்கையர்கள் நிலவும் சூழ்நிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அத்தியாவசியக் காரணங்கள் தவிர்ந்த விடயங்களுக்கு வெளியில் செல்வதைத் தவிர்த்து அவதானத்துடன் செயற்படுமாறும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106