முல்லை நாயாறு பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – கடற்றொழிலளர் கோரிக்கைகள் தொடர்பில் நேரில் ஆராய்வு!
Saturday, July 20th, 2024
முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பிரதேச கடற்றொழிலளர் முன்வைத்துவரும் கோரிக்கைகள் தொடர்பில் நெரில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விழஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்
இந்நிலையில் நாயாறு பாலத்தை வான்தொண்டி தருமாறு பிரதேச கடற்றொழிலாளர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நாயாறு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நிலமைகளை ஆராய்ததுடன் பிரதேச கடற்றொழிலாளரகளுடன் கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்டதமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே சீன அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்ட அரிசி பொதிகளில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஒரு தொகுதி பயனாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் , கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் , கடற்றொழில் திணைக்கள மாவட்ட பணிப்பாளர், கடல்றொழில் சங்க பிரதிநிதிகள் மற்றும் பயனாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
முன்பதாக முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து வைத்தியசாலையின் அபிவிருத்தி அதன் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடியுள்ளனர். மேற்படி அமைச்சருடனான இந்தச் சந்திப்பில் சட்டத்தரணி தனஞ்செயன் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106