ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தினத்தை அடுத்த வாரம் அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பு – தேர்தல்கள் ஆணையாளர் ரத்நாயக்க தெரிவிப்பு!
Friday, July 19th, 2024
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினத்தை அடுத்த வாரம் அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பதாகத் தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் சூரியன் செய்திச் சேவை தொடர்பு கொண்டு வினவியது. அதற்குப் பதிலளித்த அவர் குறித்த திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அறிவிப்பதற்கான அதிகாரம் கடந்த 17 ஆம் திகதிமுதல் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடைத்தது.
குறித்த அறிவிப்பில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியும் வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியும் உள்ளடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதிக்குப் பின்னர் வரும் நாளொன்றில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106