தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலனுக்காக 10,000 பாடசாலைகள் மூடப்படுவது பலம் எனக் கருதுகின்றனர் – அமைச்சர் மனுச நாணயக்கார!

Friday, July 19th, 2024

யுத்தக் காலத்தில் கூட பாடசாலைகளை மூட இடமளிக்கப்படவில்லையென என சுட்டிக்காட்டியுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுச நாணயக்கார  ஆனால் தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலனுக்காக 10,000 பாடசாலைகள் மூடப்படுவது அவர்களது பலம் எனக் கருதுகின்றனர் என தெரிவித்துள்ளார்

மத்துகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – யுத்தம் நடந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர்கள் பதுங்குக் குழிகளுக்குள் அமர்ந்து மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தனர்.

யுத்த காலத்தில் புலிகள் கூட பாடசாலைகளை மூடுவதற்கு இடமளிக்கவில்லை. ஆனால் ஆசிரியர்கள் தெய்வங்கள் என்ற நிலைமையை மாற்றி, பாடசாலைக்குச் செல்லாத தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அரசியல் நலனுக்காக அதிபர்களையும் ஆசிரியர்களையும் பயன்படுத்தி இலவசக் கல்விக்குப் பாரிய களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசியலைப் பற்றிச் சிந்திக்காமல் ஒன்றிணைந்துள்ளதாக அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106