பெருந்தோட்ட நிறுவனங்கள் அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ள காணிகளை சட்டரீதியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறைசார் மேற்பார்வைக் குழு, பரிந்துரை!

Thursday, July 18th, 2024

பெருந்தோட்ட நிறுவனங்கள் அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ள காணிகளை சட்டரீதியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளது.

அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் அல்லது மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை என்பவற்றுக்கு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒதுக்கப்படாத காணிகள் பெருந்தோட்ட நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகக் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, குறித்த மேற்பார்வை குழுவுக்கு அறிவித்துள்ளது.

அதற்கமைய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படாத, நிறுவனங்களால் பலவந்தமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை உடனடியாக மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, அந்தக் குழுவின் தலைவர், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106