இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ள இந்திய அணி : வெளியாகவுள்ள அணிகளின் விபரங்கள்!
Wednesday, July 17th, 2024
இலங்கையில் இந்த மாத இறுதியில் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள இந்திய ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் விபரங்கள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா தனிப்பட்ட காரணங்களுக்காக, இந்திய அணியில் இடம்பெறவில்லை.
எனவே, சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விளையாடவேண்டும் என்று புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆர்வம் கொண்டுள்ளார்
முன்னதாக குறித்த மூவருக்கும் இலங்கை சுற்றுலாவில் ஓய்வு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே பாண்டியாவின் பயணத்தவிர்ப்பை அடுத்து, புதிய யோசனையை கம்பீர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை, 20 க்கு 20 போட்டிகளில் இருந்து ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் ஓய்வுப் பெற்றுள்ளமையால், ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூரியக்குமார் யாதவ் இலங்கைக்கு எதிரான 20 க்கு 20 போட்டிகளுக்கு தலைமையேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106