புதிய பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகளில் இறங்கியது சீனா – ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆலோசனை!

Monday, July 15th, 2024

சீனாவில் புதிய பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக, பொருளாதார ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

அதன்படி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தலைமையில் நடைபெறவுள்ள இந்த பொருளாதார ஆலோசனைக் கூட்டம் இன்று (15) ஆரம்பமாகி எதிர்வரும் 4 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இதில், சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அனைத்து 376 உறுப்பினா்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், எதிர்கால நவீன தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்தி நாட்டை வேகமாக முன்னேற்றும் வகையில் பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள, சீனாவின் இந்த நடவடிக்கையை உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

ஏனெனில், உலகின் பல்வேறு பொருள்களின் உற்பத்தி மையங்களில் ஒன்றாகத் திகழும் சீனாவில் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீா்திருத்தங்கள் அனைத்து நாடுகளிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தலைமையில் நடைபெறும் பொருளாதார சீா்திருத்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சீன நிறுவனங்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் ஆராயப்பட இருக்கிறது.

முக்கியமாக சீன தயாரிப்பு நவீன மின்னணுப் பொருள்கள், மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதனால், இது தொடா்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

இதனிடையே, சீனா அரசியல் ரீதியாக பல்வேறு நாடுகளுடன் மோதல் போக்கைக் கொண்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் மட்டுமல்லாது, இந்தியாவுடன் எல்லைப் பிரச்னை, தென்சீன கடல் பகுதிக்கு உரிமை கொண்டாடுவதன் மூலம் ஜப்பான், வியட்நாம், பிலிப்பின்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளுடன் சீனாவுக்கு பிரச்சினைக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106