ஐசிசியின் இருபதுக்கு 20 சகலதுறை வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியானது – வனிந்து ஹசரங்க 222 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம்!

Thursday, July 11th, 2024

ஐசிசியின் இருபதுக்கு 20 சகலதுறை வீரர்களின் தரவரிசைப் பட்டியல் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க புள்ளிப் பட்டியலில் 222 புள்ளிகளைப் பெற்று மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்திய அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா 213 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், அவுஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் 211 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். அத்துடன், இலங்கை அணியின் தசுன் ஷானக்க 15 ஆம் இடத்தில் உள்ளார்.

ஐசிசியின் இருபதுக்கு 20 சகலதுறை வீரர்களின் தரவரிசையில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சில வாரங்களுக்கு முன் முதலிடத்திலிருந்தார்.

சகலதுறை வீரர்களுக்கான புள்ளிப் பட்டியலில் 222 புள்ளிகளைப் பெற்று ஹர்திக் பாண்டியா மற்றும் இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க ஆகியோர் சமநிலையிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106