புதிய வரி விதிப்பு மசோதாவை எதிர்த்து போராடியவர்களுக்கு எதிராக போலிஸார் அடக்குமுறை – மன்னிப்பு கோரினார் கென்யா நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ!

Monday, July 8th, 2024

மேற்கு நாடான கென்யாவில் புதிய வரி விப்திப்பு மசோதாவை எதிர்த்து போராடியவர்களிடம் போலிஸார் அடக்குமுறையை கையாண்டதற்காக அந்த நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ மன்னிப்பு கோரியுள்ளார்.

இது குறித்து X தளத்தில் கெவின் மனோரி என்ற இளைஞர் பொலிஸார் தன்னை கைது செய்த்து குறித்து வெளியிட்ட பதிவுக்கு அளித்த பதிலில் ரூட்டோ இவ்வாறு மன்னிப்பு கோரினார்.

கென்யாவில் அதிகரித்து வரும் விலைவாசியைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து கடந்த 2022ம் ஆண்டில் ஆட்சியை பிடித்த ரூட்டோ நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சில சீர்திருத்தங்களை அறிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக கூடுதல் வரி விதித்து அவர் தாக்கல் செய்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதில் 22 பேர் உயிரிழந்தனர். போராட்டத்தின் போது பொலிஸார் கடுமையாக நடந்து கொண்டதாக மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது. இறுதியில் அந்த மசோதாவை ரூட்டோ திரும்ப பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106