தொழில் திணைக்கள அதிகாரிகள் நாளை கட்டாயம் கடமைக்கு வர வேண்டும்!
Wednesday, September 14th, 2016
தொழில் திணைக்கள அதிகாரிகள் அனைவரும் கட்டாயம் நாளை 15ம் திகதி கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என, அந்த திணைக்களத்தின் ஆணையாளர் சாந்தனி அமரதுங்க தெரிவித்துள்ளார்.
சில கோரிக்கைகளை முன்வைத்து தொழில் திணைக்கள ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக மக்களின் உரிமைகள் மீறப்படுவதனால், இவர்களது விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, தொழில் திணைக்களம் கூறியுள்ளது.
எனவே நாளை அனைத்து ஊழியர்களும் கடமைக்கு வர வேண்டும் என சாந்தினி அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
முழுங்காவில் கதிராவில் குளத்தால் ஏற்படவிருந்த பாரிய அழிவை தடுத்த அமைச்சர் டக்ளஸின் இணைப்பாளர் தவநாதன...
பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள...
இலங்கைக்கான கனேடிய தூதுவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!
|
|
|


