விசேட சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் பிள்ளைகளின் கல்வி உரிமையைப் பாதுகாப்பேன் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!
Friday, June 28th, 2024
”எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட இடமளிக்கபோவதில்லை என்றும் அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம்” என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பலாங்கொட ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவெனாவுக்கு நேற்றையதினம் ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டிருந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” –
நாட்களில் ஆசிரியர் சங்கங்களின் நடவடிக்கைகளால் ஆசிரியர் பணியின் மரியாதை கேள்விக்குறியாகியுள்ளது. கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலுக்கு மத்தியில் பாதுகாப்பு தரப்பினரின் தடைகளை தகர்த்துச் செல்லும் ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க முடியாது.
எனவே, எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட இடமளிக்கபோவதில்லை. விசேட சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106