அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்த இலங்கை கடற்படை அதிகாரி ரத்நாயக்காவின் பூதவுடலுக்கு அஞ்சலி மரியாதை செலுத்திய அமைச்சர் டக்ளஸ் !

Friday, June 28th, 2024

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்த இலங்கை கடற்படை அதிகாரி ரத்நாயக்காவின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார்.

நேற்றையதினம் அமரரது இறுதி நிஜகழ்வகள் அவரது குருநாதகலில் உள்ள இல்லத்தில் கடற்படையினரது சிறப்பு மரியாதைகளுடன் இடம்பெற்றன

குறித்த இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அன்னாரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்ப உறவுகளுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் அமரரது புகழுடல் ஊர்வலமாக இறுதி அடக்கத்திற்காக எடுத்துச்செல்லப்பட்டவேளையில் அமரரது உடலத்தை தாங்கிய பேளையையும் அமைச்சர் சுமந்தும் சென்றிருந்தார். இதேவேளை குறித்த கடற்படை வீரரின் இறுதி நிகழ்வுவகளில் வடமாகாண கிராமிய கடல்றொழலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை வடமாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் முகமாக இந்திய கடற்றொழிலாளர்களின் மீன்பிடி படகுகள்  இலங்கை கடலெல்லை பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து உயிர் தேசங்களையும், உடைமையினையும் அழித்து வருகின்றன. 

அந்த வகையில் காங்கேசன்துறை கடற்பகுதியில் நேற்றுமுன்தினம் இந்திய இழுவைமடி படகு மோதியதில் காயமடைந்து உயிரிழந்த கடற்படை வீரரின் இறுதிக்கிரியைகள் நேற்று (27)  குருநாகலில் நடைபெற்றது.

காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களின் படகு ஆபத்தை தோற்றுவிக்கும் வகையில் மோதியதில்  இலங்கை கடற்படை வீரரும், கடற்படையின்  விசேட படகுகள் அணியின் உறுப்பினராக கடமையாற்றி வந்த 41 வயதான பிரியந்த ரத்நாயக்கே என்பவரே நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

குருநாகல் – இப்பாகமுவ பகுதியை சேர்ந்த இவர் 2004 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்துள்ளதுடன்,  சுழியோடிகள் பிரிவில் திறமையை வெளிப்படுத்திய வீரராவார்.

இதேவேளை, கடற்றொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவ சங்கங்களை சேர்ந்த சிலரும்,  கடற்படை வீரருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக குருநாகலுக்கு  சென்றிருந்ததோடு, கடற்படை வீரருக்கு தங்களது இரங்கலையும் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை உயிரிழந்த கடற்படை வீரருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக யாழ்ப்பாணம் – மாதகல்  வலி. தென்மேற்கு கூட்டுறவு சங்கத்தின் கடற்றொழில் அலுவலகத்தில் குறித்த அஞ்சலி பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இது இவ்வாறிருக்க வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 214 இந்திய மீனவர்கள் 28  படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106