2024 உலகக் கிண்ணம் – முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை சந்திக்கும் ஆப்கானிஸ்தான்!

Tuesday, June 25th, 2024

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அடிப்படையில் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

அதன்படி இந்திய அணி, இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்க அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இதேவேளை, இன்று இடம்பெற்ற சுப்பர் 8 போட்டியில் பங்களாதேஷ் அணிக்கெதிராக ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதுடன் 2020 உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

இதேவேளை T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியின் முதல் போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே வியாழக்கிழமை நடைபெற உள்ளது. போட்டி உள்ளூர் நேரப்படி காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேலும் அரையிறுதியின் இரண்டாவது போட்டி இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடையே நடைபெற உள்ளதுடன் அந்த போட்டி உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு 8:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106