உலகக் கிண்ண கிரிக்கெட் – அவுஸ்திரேலிய அணியை வரலாற்று வெற்றிகண்டது ஆப்கானிஸ்தான் அணி !

Sunday, June 23rd, 2024

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் சுப்பர்- 8 சுற்றில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.

அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 60 ஓட்டங்களையும், இப்ராஹிம் சத்ரான் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை (ஹட்ரிக்) கைப்பற்றினார்.

வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல் 59 ஓட்டங்களைப் பெற்றார்.  பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் குல்பாடின் நைப் 4 விக்கெட்டுக்களையும், நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிரந்தமை கறிப்பிடத்தக்கது .

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106