ஐசிசி உலகக் கிண்ணம் – மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி!

Saturday, June 22nd, 2024

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற சூப்பர் 8 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்க மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அமெரிக்கா அணி சார்பில் எண்ட்ரிஸ் கௌஸ் ( Andries Gous) அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.  பந்து வீச்சில் என்ரூ ரசல் ( Andre Russell) மற்றும் ரோஸ்டன் சேஸ் ( Roston Chase) ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

129 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் சாய் ஹோப் (Shai Hope) அதிகபட்சமாக 81 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106