2023 – 2024 பெரும்போக மற்றும் சிறுபோக நெல் கொள்வனவுக்காக சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் – நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி !

Friday, June 21st, 2024

2023, 2024 பெரும்போக மற்றும் சிறுபோக நெல் கொள்வனவுக்காக சலுகை வட்டி வீதத்தின் கீழ் வங்கிகள்மூலம் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2024 சிறுபோகத்தில் நெல் கொள்வனவுக்கான கடன்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற திறைசேரி பிரதிச் செயலாளர் மற்றும் ஏனைய அமைச்சுகள், திணைக்களங்கள் அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிரதிநிதிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் படி சிறுபோகத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் நெற் களஞ்சியசாலை உரிமையாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் வழங்கப்படவுள்ளது.

இதன்படி வங்கிகள்மூலம் 6,000 மில்லியன் ரூபாய் சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106