T20 உலக கிண்ணம் – நெதர்லாந்தை வீழ்த்தி 83 ஓட்டங்களால் வெற்றிபெற்றது இலங்கை!
Monday, June 17th, 2024
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 83 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
202 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 16.4 ஓவர்களில் 118 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த வெற்றியுடன் இலங்கை அணி மூன்று புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. எனினும், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்பதாக நடப்பு T20 உலகக் கிண்ண தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடும் இலங்கை அணி நெதர்லாந்து அணிக்கு 202 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
டி குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில் தமது கடைசி லீக் போட்டியில் விளையாடி வருகின்றன.
டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச முடிவெடுத்திருந்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் நிறைவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை குவித்திருந்தது.
இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் மற்றும் சரித்த அசலங்க ஆகியோர் தலா 46 ஓட்டங்களை குவித்திருந்தனர்.
அத்துடன் தனஞ்சய டி சில்வா 32 ஓட்டங்களையும், அஞ்சலோ மேத்தியூல் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106