உயர்தர மருந்துகள் தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்கப்படும் – சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
Sunday, June 16th, 2024
850 அத்தியாவசிய மருந்துகளில் சில மருந்துகளைத் தவிர அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் தட்டுப்பாடின்றி பராமரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
எல்பிட்டியவில் நேற்றையதினம் (15) இடம்பெற்ற நடமாடும் சுகாதார வைத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே சுகாதார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தேசிய கொள்வனவு முறைமைக்கு அமைவாக உயர்தர மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இம்முறை 8,224 மாணவர்களுக்கு 9 பாடங்களில் ஏ!
தேர்தல் வராவிட்டல் தமிழ் அரசியல் கைதிகளை மறந்திருப்பர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்!
பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு!
|
|
|


