விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கு IMF இன் நிறைவேற்றுச் சபை அனுமதி!
Thursday, June 13th, 2024
விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது எக்ஸ் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு நேற்றைய தினம் கூடி விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான இரண்டாவது மதிப்பாய்வு குறித்து கலந்துரையாடியிருந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டம் தொடர்பான இரண்டாம் கட்ட மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளிற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடந்த மார்ச் 21ஆம் திகதி பணியாளர்கள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது.
நாட்டைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்காக சர்வதேச நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது.
இதன் விளைவாக கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 3 பில்லியன் டொலர்கள் பிணையெடுப்புப் பொதியை வழங்க அனுமதியளித்தது.
இந்த நிதி கட்டங் கட்டமாக இலங்கைக்கு விடுவிக்கப்படுகிறது. இது 48 மாதங்களில் 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் கடன் வசதியாகும்.
ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறையும் முந்தைய கடன் தவணையின் கீழான வேலைத்திட்டம் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு அடுத்த தவணை விடுவிக்கப்படுகிறது.
இந்தக் கடன் வசதி மூலம் இதுவரை இலங்கைக்கு 670 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த கடன் வசதியின் 3ஆவது தவணையை நேற்று நள்ளிரவு சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்துள்ளது. இதனூடாக இலங்கைக்கு 335 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106